நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் ஆண் மற்றும் பெண் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளை நாம் தமிழர் கட்சி இன்று வெளியிட்டது.
நாடாளுமன்றத் தேர்தல் மே மாதத்தில் வரவுள்ளது. இந்த தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில், அக்கட்சி சார்பில் ஆண் மற்றும் பெண் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதி பட்டியலை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று வெளியிட்டார்.
அதன்படி நாம் தமிழர் சார்பில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளுள் ஆண்களும், பெண்களும் தலா 20 தொகுதிகளில் போட்டியிடவுள்ளனர்.
இதேபோல், காலியாக இருக்கும் 21 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத்தேர்தலுக்கான ஆண், பெண் வேட்பாளர்கள் தொகுதிப் பட்டியலையும் சீமான் இன்று வெளியிட்டார். அதன்படி, 21 தொகுதிகளுள் 11 தொகுதிகளில் ஆண் வேட்பாளர்களும், 10 தொகுதிகளில் பெண் வேட்பாளர்களும் போட்டியிடவுள்ளனர்.
நாடாளுமன்றத் தேர்தலில் ஆண் வேட்பாளர்களுக்கானத் தொகுதிகள்:
மத்திய சென்னை
திருபெரும்புதூர்
அரக்கோணம்
கிருஷ்ணகிரி
திருவண்ணாமலை
சேலம்
நாமக்கல்
திருப்பூர்
கோயம்புத்தூர்
திண்டுக்கல்
தேனி
கரூர்
பெரம்பலூர்
சிதம்பரம் (தனி)
தஞ்சாவூர்
தூத்துக்குடி
தென்காசி (தனி)
கன்னியாகுமரி
புதுச்சேரி
விருதுநகர்
நாடாளுமன்றத் தேர்தலில் பெண் வேட்பாளர்களுக்கானத் தொகுதிகள்:
ஆண்டிபட்டி
பெரியகுளம் (தனி)
தென் சென்னை
காஞ்சிபுரம் (தனி)
வேலூர்
தர்மபுரி
ஆரணி
விழுப்புரம் (தனி)
கள்ளக்குறிச்சி
ஈரோடு
நீலகிரி (தனி)
பொள்ளாச்சி
திருச்சிராப்பள்ளி
கடலூர்
மயிலாடுதுறை
நாகப்பட்டினம் (தனி)
சிவகங்கை
மதுரை
இராமநாதபுரம்
திருநெல்வேலி
சட்டப்பேரவை இடைத்தேர்தலில் ஆண் வேட்பாளர்களுக்கானத் தொகுதிகள்:
பெரம்பூர்
ஆம்பூர்
அரவக்குறிச்சி
நிலக்கோட்டை
விளாத்திகுளம்
சாத்தூர்
பாப்பிரெட்டிபட்டி
சோளிங்கர்
திருவாரூர்
ஒட்டப்பிடாரம் (தனி)
ஓசூர்
சட்டப்பேரவை இடைத்தேர்தலில் பெண் வேட்பாளர்களுக்கானத் தொகுதிகள்:
ஆண்டிபட்டி
பெரியகுளம் (தனி)
தஞ்சாவூர்
அரூர் (தனி)
மானாமதுரை (தனி)
குடியாத்தம் (தனி)
திருப்போரூர்
திருப்பரங்குன்றம்
பரமக்குடி (தனி)
பூந்தமல்லி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரூபாய் மதிப்பு சரிவு: 1 டாலர் - ரூ. 95.73! 47 காசுகள் சரிவு!

இன்றைய செய்திகள் மே 26 - நேரலை!

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

ஜூன் முதல் வாரத்தில் கேரள நிதி நிலைமை குறித்த வெள்ளை அறிக்கை: முதல்வர்
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



