கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் சிறுவாணி வாசகர் மையம் சார்பில் எழுத்தாளர் நாஞ்சில் நாடன் விருது தமிழியல் ஆய்வாளர் ப.சரவணனுக்கு ஜன.20-ஆம் தேதி வழங்கப்படவுள்ளது.
வாசகர் வட்டம், இலக்கியச் சிந்தனை அமைப்புகளை முன்னுதாரணமாகக் கொண்டு சிறுவாணி வாசகர் மையம் கடந்த 2017-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கவும், சிறந்த எழுத்தாளர்களின் எழுத்துகளை இன்றைய தலைமுறைக்குக் கொண்டு செல்லும் பணியையும் இந்த மையம் ஆற்றி வருகிறது.
கலை, இலக்கியம், சமூகம் ஆகிய துறைகளில் நேர்மையாகவும், துணிச்சலாகவும் தொடர்ந்து செயல்படுபவர்களுக்கு சிறுவாணி வாசகர் மையம் சார்பில் ஆண்டுதோறும் நாஞ்சில் நாடன் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது பரிசுத் தொகை ரூ.50 ஆயிரம், கேடயம், சான்றிதழ் ஆகியவை அடங்கியதாகும். கடந்த ஆண்டு (2018) ஓவியர் ஜீவாவுக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
இந்த ஆண்டுக்கான நாஞ்சில் நாடன் விருது தமிழியல் ஆய்வாளரும், உவேசா படைப்புகள், பல நூல்களின் பதிப்பாசிரியருமான முனைவர் ப.சரவணனுக்கு கோயம்புத்தூர் அண்ணாசிலை அருகில் உள்ள ஆர்த்ராஅரங்கில் ஜன.20-ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு நடைபெறும் விழாவில் வழங்கப்படவுள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை சிறுவாணி வாசகர் மையத்தின் தலைவர் தி.சுபாஷிணி, ஒருங்கிணைப்பாளர் ஜி.ஆர்.பிரகாஷ், ஆலோசகர்கள் சொல்வனம் வ.சீனிவாசன், ஆர்.ரவீந்திரன் ஆகியோர் செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூன் 25 - நேரலை

இரண்டாம் பாதியில் களமிறங்கிய நெய்மர்: நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது பிரேசில்!

கோவைப் புதூா் பகுதியில் முள்புதரில் கிடந்த இளம்பெண் சடலம்! காரணம் என்ன?
எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா கூகுள் பிக்சல் 11 ப்ரோ? சிறப்புகள் என்னென்ன?
விடியோக்கள்

UN Kannan Interview | விஜய், உதயநிதி மோதல் தொடர்ந்தால்...? | CM Vijay | TVK | Udhayanidhi | DMK

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |



