திருவாரூர் தியாகராஜர் கோயிலில் உள்ள உலோக சிலைகள் பாதுகாப்பு மையத்தில் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு கூடுதல் பிரிவு போலீஸார் மற்றும் தொல்லியல் துறை அலுவலர்கள் 3-ஆம் கட்டமாக புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
தமிழகம் முழுவதும் கோயில்களில் உள்ள சுவாமி சிலைகள் காணாமல் போனது குறித்தும், கோயில்களில் உள்ள சிலைகள் உண்மையானவையா என்பது குறித்தும் தொல்லியல் நிபுணர்கள் மற்றும் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினர் ஆய்வு மேற்கொண்டனர். திருவாரூர் தியாகராஜர் திருக்கோயிலில் உள்ள சிலைகள் பாதுகாப்பு மையத்தில் 625 கோயில்களுக்கு சொந்தமான சுமார் 4,375-க்கும் மேற்பட்ட சிலைகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
இச்சிலைகள் திருவாரூர், தஞ்சாவூர், நாகை, கடலூர் மாவட்டங்களில் உள்ள சிறிய கோயில்களுக்கு உரியவை ஆகும். சம்பந்தப்பட்ட கோயில்களின் திருவிழாவின்போது, அறநிலையத் துறையின் அனுமதி பெற்று, சிலைகள் எடுத்துச் செல்லப்பட்டு, திருவிழா முடிந்த பிறகு மீண்டும் சிலைகள் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைக்கப்படுவது வழக்கம்.
இந்த சிலைகளின் உண்மை தன்மை குறித்து குறித்து ஏற்கெனவே 2 கட்டங்களாக 500-க்கும் மேற்பட்ட சிலைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அந்த ஆய்வில் சிலைகளின் நீளம் மற்றும் உயரம், உலோகத்தின் தன்மை, பழைய புகைப்படங்கள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யப்பட்டன. இந்நிலையில், 3-ஆம் கட்டமாக புதன்கிழமை இந்த ஆய்வு நடைபெற்றது.
திருமக்கோட்டை, பட்டுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதி கோயில்களுக்குச் சொந்தமான 92 சிலைகள் ஆய்வு செய்யப்பட்டன. ஆய்வில், தொல்லியல் துறை தென்மண்டல இயக்குநர் நம்பிராஜன் மற்றும் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் என 20-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு! புதிய செயலி அறிமுகம்!
மிக இளம் வயது மேயர்! பிரிட்டன் வரலாற்றில் இடம்பெற்ற இந்திய வம்சாவளி இளைஞர்!!

அடுத்த 2 மணி நேரத்துக்கு 10 மாவட்டங்களில் மழை!

30 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லைக்காளியம்மன் கோயில் தெப்போற்சவம்!
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

