கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பிளாஸ்டிக் தடை விதிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளதா?: மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி 

பிளாஸ்டிக் தடை விதிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளதா? என்று மத்திய அரசின் இரண்டு துறைகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

News image
Updated On :29 ஜனவரி 2019, 11:01 am

DIN

சென்னை: பிளாஸ்டிக் தடை விதிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளதா? என்று மத்திய அரசின் இரண்டு துறைகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மாசடைந்து வரும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக தமிழகத்தில் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஜனவரி 1-ம் தேதியிலிருந்து தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதனைத் தீவிரமாக அதிகாரிகள் நடைமுறைப்படுத்தி வருகின்றனர்

இதுதொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த ஆணையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கானது திங்களன்று விசாரணைக்கு வந்தபோது தமிழகத்தில் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளதா? இல்லையா? என்பது தொடர்பாக பதில் அளிக்குமாறு, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை மற்றும் ரசாயனத்துறை அமைச்சகங்கள் விளக்கமளிக்குமாறு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

விரிவான பதிலை தாக்கல் செய்ய வேண்டும் என்று இரு அமைச்சகங்களுக்கும்  நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிமன்றம், பிப்ரவரி 4-ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.