சென்னை: நீட் விலக்கு மசோதா 2017-லேயே தமிழக சட்டப்பேரவைக்கு திருப்பி அனுப்பப்பட்டுவிட்டது என்று உயர் நீதிமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது.
தமிழகத்திற்கு நீட் தேர்வு இருந்து விலக்கு கோரும் மசோதாவானது கடந்த 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது.
தற்போது நடைபெற்று வரும் தமிழக சட்டபேரவை கூட்டத் தொடரில் இந்த விவகாரம் தொடர்பாக எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் மற்றும் தமிழக அமைச்சர்கள் சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர் ஆகியோருக்கு இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது.
அப்போது நீட் விலக்க மசோதாவானது நிராகரிக்கப்பட்டு தமிழக சட்டப்பேரவைக்கு திருப்பி அனுப்பப்பட்டு விட்டது என்றும், அதை ஆளும் அதிமுக அரசு மறைத்து விட்டது என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டினார். ஆனால் இதனை உறுதியாக மறுத்த அமைச்சர் சி.வி.சண்முகம் அந்த மசோதா நிறுத்தி மட்டுமே வைக்கப்பட்டுள்ளது; நிராகரிக்கப்படவில்லை என்று பதிலளித்திருந்தார்.
இந்நிலையில் நீட் விலக்கு மசோதா 2017-லேயே தமிழக சட்டப்பேரவைக்கு திருப்பி அனுப்பப்பட்டுவிட்டது என்று உயர் நீதிமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணையில் மத்திய உளத்தூரை செயலர் வைத்யா சார்பில் செவ்வாயன்று பதில்மனு தாக்கல் செயயப்பட்டது. அதில், ' 2017 பிப்ரவரியில் அனுப்பப்பட்ட நீட் விலக்கு மசோதா, செப்டம்பரில் நிராகரிக்கப்பட்டு தமிழக அரசுக்கு 2017 செப்டம்பர் 22ம் தேதியன்று திருப்பி அனுப்பப்பட்டுவிட்டது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக சட்டப்பேரவையில் ஸ்டாலின் கூறிய தகவல் உண்மையென்றால் ராஜிநாமா செய்யத் தயார் என்று கூறிய அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு தர்மசங்கடமான நிலை ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

07:07... ஹார்திக் பாண்டியாவின் வைரல் பதிவு..! சிஎஸ்கேவுக்கு வருகிறாரா?

இன்றைய செய்திகள் மே 26 - நேரலை!

அம்பாசமுத்திரம் தொகுதி காலியானதாக அறிவிப்பு! 5 இடங்களுக்கு விரைவில் இடைத்தேர்தல்?

குவாலிஃபையர் 1: ஆர்சிபிக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சு!
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



