கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தண்ணீர் தட்டுப்பாட்டால் சென்னையில் ஓட்டல்கள் மூடப்படுகிறது என்பது தவறு: ஓட்டல் உரிமையாளர்கள் பேட்டி 

தண்ணீர் தட்டுப்பாட்டால் சென்னையில் ஓட்டல்கள் மூடப்படுகிறது என்பது தவறான தகவல் என்று அமைச்சர் வேலுமணியை சந்தித்த பின்னர் ஓட்டல் உரிமையாளர்கள் பேட்டியளித்துள்ளனர்.

News image
Updated On :18 ஜூன் 2019, 11:35 am

DIN

சென்னை: தண்ணீர் தட்டுப்பாட்டால் சென்னையில் ஓட்டல்கள் மூடப்படுகிறது என்பது தவறான தகவல் என்று அமைச்சர் வேலுமணியை சந்தித்த பின்னர் ஓட்டல் உரிமையாளர்கள் பேட்டியளித்துள்ளனர்.

தமிழகம் முழுவதுமே பரவலாக தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அதிலும் சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு மிகவும் கடுமையாக உள்ளது. இதன் காரணமாக பல்வேறு உணவகங்களில் மதிய உணவு நிறுத்தப்பட்டுள்ளது. நிறைய மேன்ஷன்கள் மூடப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் தண்ணீர் தட்டுப்பாட்டால் சென்னையில் ஓட்டல்கள் மூடப்படுகிறது என்பது தவறான தகவல் என்று அமைச்சர் வேலுமணியை சந்தித்த பின்னர் ஓட்டல் உரிமையாளர்கள் பேட்டியளித்துள்ளனர்.

சென்னை எம்ஆர்சி நகரில் செவ்வாயன்று ஓட்டல் உரிமையாளர்களுடன் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, 'குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிப்பது எப்படி?' என்பது குறித்து அமைச்சர் வேலுமணி ஆலோசனை நடத்தினார்.

சந்திப்புக்குப் பிறகு செய்தியாளார்களிடம் பேசிய ஓட்டல் உரிமையாளர்கள் கூறியதாவது:

சென்னையில்  தண்ணீர் தட்டுப்பாட்டால் ஓட்டல்கள் மூடப்படுகிறது என்பது தவறான தகவல்

தனியார் குடிநீர் லாரிகள் மூலமாக தண்ணீர் பெற்றுக் கொள்கிறோம்.

தண்ணீர் தட்டுப்பாடு இல்லை; ஆனால் விலை சற்று கூடுதலாக உள்ளது

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.