45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

திருச்சி அருகே ஜல்லிக்கட்டில் மாடு முட்டிஇளைஞர் பலி 

திருச்சி அருகே வெள்ளியன்று நடந்த ஜல்லிக்கட்டில் மாடு முட்டி இளைஞர் ஒருவர் பலியானார்.

News image
Updated On :1 மார்ச் 2019, 12:53 pm

DIN

திருச்சி: திருச்சி அருகே வெள்ளியன்று நடந்த ஜல்லிக்கட்டில் மாடு முட்டிஇளைஞர் ஒருவர் பலியானார்.

திருச்சி மாவட்டம் கல்லக்குடியில் வெள்ளியன்று ஜல்லிக்கட்டு திருவிழா நடைபெற்றது. இதில் வாடிவாசலில் இருந்து சுமார் 400 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

காளைகளை அடக்க இளைஞர்களும் களத்தில் குதித்தனர். இதில் அருகேயுள்ள அனந்திமேடு கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் (23) என்ற இளைஞர் நெஞ்சில் மாடு முட்டியதில் படுகாயமடைந்தார்.

அவர் உடனடியாக லால்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.     ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

ஜல்லிக்கட்டில் மேலும் 8 பேர் காயமடைந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.