புதிய தலைமை நீதிபதி: சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்படவுள்ள ஏ.கே.மிட்டல், கடந்த 1958-ஆம் ஆண்டு செப்டம்பர் 30-ஆம் தேதி சத்தீஸ்கர் மாநிலத்தில் பிறந்தார். அவர், தனது இளங்கலை வணிகவியல் படிப்பையும், சட்டப்படிப்பையும் தில்லியில் முடித்தார். பின்னர் பஞ்சாப் - ஹரியாணா மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞராகப் பணியாற்றினார். மத்திய, மாநில அரசுப் பணிகள் விவகாரம், உரிமையியல் தொடர்பான வழக்குகளில் நிபுணத்துவம் பெற்றுள்ள இவர், பஞ்சாப்-ஹரியாணா உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
கடந்த 2018-ஆம் ஆண்டு மேகாலயா உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். வரும் 2020-ஆம் ஆண்டு செப்டம்பரில் ஓய்வு பெற உள்ள நிலையில், நீதிபதி ஏ.கே.மிட்டல் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.