கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மோடி-சீன அதிபர் மாமல்லபுரத்தில் சந்திப்பு: பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆய்வு

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோர் சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

News image
Updated On :13 செப்டம்பர் 2019, 11:30 pm

DIN


சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோர் சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், இந்தச் சந்திப்புக்கான பூர்வாங்க பாதுகாப்பு ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகிறது.
பிரதமர் மோடியும், சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் அடுத்த மாதம்  மாமல்லபுரத்தில் சந்தித்து பேச முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. 
இந்தச் சந்திப்பின் போது பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சந்திப்பு அக்டோபர் 11-ஆம் தேதி முதல் 13- ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் தெரிகிறது.
தலைவர்கள் வருகையையொட்டி மாமல்லபுரத்தில் பாதுகாப்பு வசதிகளை உயர் பாதுகாப்பு அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழக உயர் பாதுகாப்பு அதிகாரிகள் வியாழக்கிழமை மாமல்லபுரத்துக்கு வந்தனர்.  அவர்கள் பிரதமர் மோடியும் சீன அதிபரும் ஹெலிகாப்டரில் வந்து இறங்க இருக்கும் திருவிடந்தை ஹெலிபேடு பகுதியை ஆய்வு செய்தனர். 
பின்னர் அங்கிருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக தலைவர்கள் காரில் செல்லும் பாதை, அவர்கள் தங்கும் இடம், கடற்கரை கோயிலை பார்வையிடும் பகுதி, நவீன ரேடார்கள் அமைக்க வேண்டிய இடங்கள் உள்ளிட்டவை தொடர்பாக ஆய்வு செய்தனர்.
விரைவில்,  சீனாவில் இருந்து அங்குள்ள அதிபரின் பாதுகாப்புப் படையினரும் மாமல்லபுரத்துக்கு வந்து ஆய்வு நடத்த உள்ளதாகத் தெரிகிறது.
மாமல்லபுரத்தில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பாக மத்திய அரசுத் துறை அதிகாரிகள் விரைவில் தமிழகம் வந்து நேரில் ஆய்வு செய்யவுள்ளனர். 
இந்த ஆய்வுக்கு முன்பாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தலைமைச் செயலாளர் க.சண்முகம் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இக்கூட்டத்தில் டிஜிபி திரிபாதி, சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விசுவநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.