தமிழகத்தில் 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: இந்த பட்டியலில் உங்கள் ஊர் இருக்கிறதா?
தமிழகத்தில் கடலூர், மதுரை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


சென்னை: தமிழகத்தில் கடலூர், மதுரை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், வெப்பச் சலனம் மற்றும் வட தமிழகத்தின் வளி மண்டலத்தில் ஏற்பட்ட மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்துக்கு ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் கடலூர், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, அரியலூர், ராமநாதபுரம் உட்பட 15 மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் கன மழை பெய்யலாம்.
சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் மிதமான மழை பெய்யலாம்.
கடந்த 24 மணி நேரத்தைப் பொறுத்தவரை அதிகபட்சமாக அரியலூர் மாவட்டம் திருவிடைமருதூர் பகுதியில் 15 செ.மீ. மழை பதிவாகியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...