புகழூரில் கட்டப்படும் கதவணையில் மின்சாரம் தயாரிக்க கருத்துரு கேட்பு: எம்.ஆர். விஜயபாஸ்கர்

கரூர் புஞ்சைப்புகழூரில் கட்டப்படவுள்ள கதவணையில் இருந்து மின்சாரம் தயாரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்ய மின்வாரியத்
கரூர் மாவட்டம், நெரூரில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டுவதற்கு ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர். உடன், திருச்சி கோட்டத்தின் திட்டம் மற்றும் வடிவமைப்பு செயற்பொறியாளர் 
கரூர் மாவட்டம், நெரூரில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டுவதற்கு ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர். உடன், திருச்சி கோட்டத்தின் திட்டம் மற்றும் வடிவமைப்பு செயற்பொறியாளர் 


கரூர் புஞ்சைப்புகழூரில் கட்டப்படவுள்ள கதவணையில் இருந்து மின்சாரம் தயாரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்ய மின்வாரியத் துறைக்கு கருத்துரு கேட்கப்பட்டுள்ளது என்றார் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.
கரூர் மாவட்டத்தில் காவிரி ஆற்றில் கதவணைகள் கட்டப்படவுள்ள நிலையில், எந்தெந்தப் பகுதிகளில் கட்டப்பட உள்ளது என்பது குறித்து நெரூர், கிழக்கு தவிட்டுப்பாளையம், புகழூர், கோம்புப்பாளையம் நொய்யல் உள்ளிட்ட பகுதிகளில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திங்கள்கிழமை பொதுப்பணித்துறை அலுவலர்களுடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியது: 
கரூர் மாவட்டத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே 3 இடங்களில் கதவணை அமைப்பதற்கு சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்டிருக்கின்றார் தமிழக முதல்வர். இதில் புஞ்சை புகழூர் பகுதியில் சுமார் ரூ. 500 கோடி மதிப்பில் கதவணை கட்டப்பட உள்ளது. குளித்தலை மற்றும் நெரூர் பகுதியில் கதவணை கட்டுவதற்கு முதற்கட்ட ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 
மிக விரைவில் கதவணைகள் கட்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கரூர் மாவட்டத்தில் ஏற்கெனவே மாயனூரில் உள்ள கதவணையில் சுமார்.1.04 டி.எம்.சி நீரை தேக்கி வைக்கலாம். இதேபோல புஞ்சைபுகழூரிலும்  கதவணை அமைக்கப்பட உள்ளது. மேலும், கூடுதலாக இந்த கதவணையில் தேக்கிவைக்கப்படும் நீரில் இருந்து ஈரோடு  மற்றும் நாமக்கல் சோழிசிராமணியில் உள்ளதுபோல மின்சாரம் தயாரிக்க சாத்தியக்கூறுகள் உள்ளனவான என ஆய்வு செய்ய மின்வாரியத்துறைக்கு அதிகாரிகள் மூலம் கருத்துரு கேட்கப்பட்டுள்ளது. இந்த கருத்துரு அடிப்படையில்  மின்சாரத்தை உற்பத்தி செய்யத் தேவையான கட்டமைப்புகளும் இந்தக் கதவணையில் அமைக்கப்படும்  என்றார். 
நிகழ்வின்போது பொதுப்பணித்துறை சார்பில் திருச்சி கோட்டத்தின் திட்டம் மற்றும் வடிவமைப்பு செயற்பொறியாளர் மூர்த்திராஜன், உதவி செயற்பொறியாளர் மணிவண்ணன், உதவி  பொறியாளர்கள் ஸ்ரீதர், பசுபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com