சென்னை: நேற்று ஒரே நாள், தங்கம் விலை சவரனுக்கு ரூ.29 ஆயிரத்துக்கும் கீழே இறங்கிய நிலையில், இன்று மீண்டும் ரூ.29 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது.
சென்னையில் கடந்த சில வாரங்களாக ஒரு பவுன் தங்கம் ரூ. 29 ஆயிரத்துக்கும் சற்று கூடுதல் விலையில் நீடித்து வந்த நிலையில் செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.144 குறைந்து, ரூ.28,944-க்கு விற்பனை செய்யப்பட்டது.
ஆனால் இன்று, ஒரு பவுன் தங்கம் விலை ரூ.128 உயர்ந்து, ரூ.29,072க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் விலை ரூ.16 உயர்ந்து ரூ.3,634க்கு விற்பனையாகிறது.
சா்வதேச பொருளாதாரச் சூழல், உலகச்சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிா்ணயிக்கப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தங்கம் விலை ஏற்றத்தை சந்தித்து வந்தது. சில நாள்கள் தங்கம் விலை குறைந்தாலும், பல நாள்கள் விலை உயா்ந்தே வந்தது. கடந்த செப்டம்பா் 5-ஆம் தேதி காலையில் ஒரு பவுன் தங்கம் ரூ.30 ஆயிரத்தைத் தாண்டியது. அதன்பின் தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்தைத் சந்தித்து வருகிறது.
இந்நிலையில், சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.28,944-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ.29,072க்கு விற்பனையாகிறது.
புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):
1 கிராம் தங்கம் .................... 3,634
1 பவுன் தங்கம் ..................... 29,072
செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):
1 கிராம் தங்கம் ..................... 3,618
1 பவுன் தங்கம் ..................... 28,944
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தெலுங்கில் மட்டுமே 15 கோடி பார்வைகள், 16 லட்சம் லைக்குகள் பெற்ற நானியின் பாடல்!

இன்றைய செய்திகள் மே 26 - நேரலை!
‘க்வாட்’ கூட்டமைப்பு வெளியுறவு அமைச்சா்கள் கூட்டம்: சீனா எதிர்வினை!

பெரும் கவலையளிக்கிறது! தொண்டர்களுக்கு திருமா வேண்டுகோள்! | VCK
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



