மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

தமிழ்ப் பல்கலை. வகுப்புகள் இணையவழியில் ஆக. 17-இல் தொடக்கம்

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் வகுப்புகள் இணையவழியில் ஆக. 17 ஆம் தேதி (திங்கள்கிழமை) தொடங்கப்படவுள்ளன என்றார் துணைவேந்தர் கோ. பாலசுப்ரமணியன்.

News image

துணைவேந்தர் கோ. பாலசுப்ரமணியன்

Updated On :15 ஆகஸ்ட் 2020, 12:22 pm

DIN


தஞ்சாவூர்: தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் வகுப்புகள் இணையவழியில் ஆக. 17 ஆம் தேதி (திங்கள்கிழமை) தொடங்கப்படவுள்ளன என்றார் துணைவேந்தர் கோ. பாலசுப்ரமணியன்.

இப்பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து அவர் பேசியது: 

கரோனா பொது முடக்கம் காரணமாக அரசின் வழிகாட்டுதலுக்கு ஏற்ப பணியாற்றும் முறை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இணையவழியாக 25 உரைத்தொடர்களும், கருத்தரங்கங்களும் நடத்தப்பட்டுள்ளன. 

அமெரிக்கவாழ் தமிழர்களுக்குத் தமிழ்க் கற்பிக்கும் தன்னார்வலத் தமிழ்ப் பயிற்றுநர்களுக்குத் தமிழ் வளர் மையம் வழியாக 2 மாதத் தமிழ்க் கல்விப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. 

தமிழ்ப் பண்பாட்டு மையத்தில் 1,000-க்கும் அதிகமான மாணவர்களைச் சேர்த்துள்ளோம். ஆசிரியர்கள் இயன்ற அளவு மாணவர்களுடன் தொடர்பு கொண்டு இணையவழியாகப் பாடங்கள் நடத்துகின்றனர். முனைவர் பட்ட வாய்மொழித் தேர்வுகள் இணையவழியாக நடைபெறுகின்றன.

அரசு வழிகாட்டுதலின்படி தொலைநிலைக்கல்வி உள்பட, இறுதியாண்டு தவிர்த்து பிற பருவ மற்றும் ஆண்டு அகமுகத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவுள்ளன. நிகழ் கல்வியாண்டுக்கான வகுப்புகள் இணையவழியாக ஆக. 17-ஆம் தேதி தொடங்கப்படவுள்ளன.

முதுநிலை, ஆய்வியல் நிறைஞர் படிப்புகளுக்கான சேர்க்கை விண்ணப்பங்கள் முதல் முறையாக இணையவழியாகப் பெறப்பட்டு வருகின்றன. பெரும் எண்ணிக்கையிலான விண்ணப்பதாரர்கள் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சேர விண்ணப்பித்துள்ளனர். நிகழாண்டு சேர்க்கை நிறைவடைந்தவுடன் தேசிய கல்வி நிறுவன தரவரிசைப் பட்டியல் அமைப்பில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தைப் பதிவு செய்து, அதில் ஒரு இடத்தைப் பெற முடியும் என நம்புகிறோம் என்றார் துணைவேந்தர்.

விழாவில் பதிவாளர் (பொ) கு. சின்னப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.