தமிழகத்தில் ஒரே நாளில் 5,986 பேருக்கு கரோனா; 116 பேர் பலி
தமிழகத்தில் இன்று புதிதாக 5,986 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (ஆக. 20 வியாழக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது; மேலும் கரோனா பாதிப்பால் 116 பேர் உயிரிழந்துள்ளனர்.


தமிழகத்தில் இன்று புதிதாக 5,986 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (ஆக. 20, வியாழக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது; மேலும் கரோனா பாதிப்பால் 116 பேர் உயிரிழந்துள்ளனர்.
மகிழ்ச்சி தரும் வகையில் கரோனா சிகிச்சையில் இருந்து வந்த 5,742 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் கரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை எட்டியுள்ளது.
மாநிலத்தின் கரோனா பாதிப்பு நிலவரம் பற்றி செய்திக் குறிப்பொன்றை மாலையில் மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.
அதில், தமிழகத்தில் இன்று புதிதாக 5,986 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதிகளவாக சென்னையில் 1,177 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் முழுதும் தொற்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 5,967. வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களில் தொற்று உறுதி செய்யப்பட்டோர் 19 பேர்.
இதையடுத்து, தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3,61,435 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், கரோனா தொற்றால் 116 பேர் (அரசு மருத்துவமனை -72, தனியார் மருத்துவமனை - 44) உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, தமிழகத்தில் கரோனாவுக்கு பலியானோரின் மொத்த எண்ணிக்கை 6,239 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் இன்று ஒரே நாளில் 5,742 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 3,01,913 பேர் குணமடைந்துள்ளனர்; தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி 53,283 பேர் மருத்துவமனைகளிலும், சிறப்பு மையங்களிலும், வீடுகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...