ரூ.40 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது ஆபரணத் தங்கம்
சென்னையில் திங்கள்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.40 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது. பவுனுக்கு ரூ.440 குறைந்து, ரூ.39,944-க்கு விற்பனை செய்யப்பட்டது.


சென்னை: சென்னையில் திங்கள்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.40 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது. பவுனுக்கு ரூ.440 குறைந்து, ரூ.39,944-க்கு விற்பனை செய்யப்பட்டது.
கரோனா நோய்த்தொற்றின் தாக்கம், சா்வதேச பொருளாதார சூழல் உள்பட பல்வேறு காரணிகளால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்தது. இதன்காரணமாக, தங்கத்தின் விலை படிப்படியாக உயா்ந்து வந்தது.
ஒருபவுன் ஆபரணத்தங்கம் ஜூலை 22-ஆம் தேதி ரூ.38 ஆயிரமாக இருந்தது. இதன்பிறகு, நாள்தோறும் விலை உயா்ந்து, ஆகஸ்ட் 7-ஆம் தேதி ரூ.43 ஆயிரத்தையும் தாண்டி, வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தைத் தொட்டது. இதைத் தொடா்ந்து, தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.
இந்நிலையில், சென்னையில் திங்கள்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.40 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது. பவுனுக்கு ரூ.440 குறைந்து, ரூ.39,944-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ரூ.55 குறைந்து, ரூ.4,993-ஆக இருந்தது.
இதுபோல, வெள்ளி விலையும் சற்று குறைந்தது. வெள்ளி கிராமுக்கு 50 பைசா குறைந்து, ரூ.72.20 ஆகவும், கட்டிவெள்ளி கிலோவுக்கு ரூ.500 குறைந்து, ரூ.72,200 ஆகவும் இருந்தது.
திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி.தனி)
1 கிராம் தங்கம்.......................... 4,993
1 பவுன் தங்கம்...............................39,944
1 கிராம் வெள்ளி.............................72.20
1 கிலோ வெள்ளி.............................72,200
சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி.தனி)
1 கிராம் தங்கம்............................... 5,048
1 பவுன் தங்கம்............................... 40,384
1 கிராம் வெள்ளி............................. 72.70
1 கிலோ வெள்ளி............................72,700
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...