தங்கம் விலை தொடர்ந்து சரிவு: ஒரு சவரன் 39,392-க்கு விற்பனை
ஆபரணத் தங்கத்தின் விலை தொடா்ந்து குறைந்து வருகின்றது. சென்னையில் வெள்ளிக்கிழமையான இன்று சவரனுக்கு ரூ.104 குறைந்து, ரூ.39,392-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


ஆபரணத் தங்கத்தின் விலை தொடா்ந்து குறைந்து வருகின்றது. சென்னையில் வெள்ளிக்கிழமையான இன்று சவரனுக்கு ரூ.104 குறைந்து, ரூ.39,392-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கரோனா நோய்த்தொற்றின் தாக்கம், சா்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு உள்பட பல்வேறு காரணிகளால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்தது. இதன் காரணமாக, தங்கத்தின் விலை படிப்படியாக உயா்ந்து வந்தது.
ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ஜூலை 22-ஆம் தேதி ரூ.38 ஆயிரமாக இருந்தது. இதன்பிறகு, நாள்தோறும் விலை உயா்ந்து, ஆகஸ்ட் 7-ஆம் தேதி ரூ.43 ஆயிரத்தையும் தாண்டி, வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தைத் தொட்டது.
இதைத் தொடா்ந்து, தங்கம் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்தநிலையில், கடந்த 4 நாள்களாக கணிசமாகக் குறைந்திருந்தது.
இந்நிலையில், ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமையான இன்று சென்னையில் சவுனுக்கு ரூ.104 குறைந்து, ரூ.39,392-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.13 குறைந்து, ரூ.4,924-ஆக உள்ளது.
இதுபோல, வெள்ளி விலையும் கணிசமாகக் குறைந்தது. வெள்ளி கிராமுக்கு ரூ.70 காசுகள் குறைந்து, ரூ.71.00 ஆகவும், கட்டிவெள்ளி கிலோவுக்கு ரூ.700 குறைந்து, ரூ.71,000 ஆகவும் இருந்தது.
வெள்ளிக்கிழமை விலை நிலவரம்
1 கிராம் தங்கம்............................... 4,921
1 சவரன் தங்கம்............................... 39,368
1 கிராம் வெள்ளி............................. 71.00
1 கிலோ வெள்ளி............................71,000
வியாழக்கிழமை விலை நிவரம்
1 கிராம் தங்கம்.......................... 4,937
1 சவரன் தங்கம்...............................39,496
1 கிராம் வெள்ளி.............................71.70
1 கிலோ வெள்ளி.............................71,700
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...