எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

சிறார் காப்பகங்களில் சமூக தணிக்கை: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

தமிழகத்தில் உள்ள அனைத்து சிறார் காப்பகங்களிலும் சமூக தணிக்கை செய்ய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரிய மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image
சிறார் காப்பகங்களில் சமூக தணிக்கை: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
Updated On :8 டிசம்பர் 2020, 6:36 am

DIN

சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து சிறார் காப்பகங்களிலும் சமூக தணிக்கை செய்ய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரிய மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தியின் பச்பன் பச்சோ அந்தோலன் அமைப்பின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், குழந்தைகளுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் 2015-ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட சிறார் நீதி (குழந்தைகள் பாதுகாப்பு) சட்டத்தை அனைத்து மாநில அரசுகளும் கண்டிப்புடன் அமல்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவுப்படி, இந்த சட்டம் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை.  சிறார் நீதி சட்டம் வரையறுத்துள்ள தரத்தின் அடிப்படையில் சிறுவர்கள் காப்பகம் இல்லை.சிறார் நீதி சட்டம் அமல்படுத்தப்படுவதை தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் கண்காணிக்க வேண்டும். தமிழகத்தில் பல மாவட்டங்களில் சிறார் நீதி வாரியம், குழந்தைகள் நல ஆணையத்தில் பதவிகள் காலியாக உள்ளது. சிறார் நிதி வாரியத்தில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. மாவட்டம் தோறும் சிறப்பு சிறார் காவல் பிரிவு, சிறார் நல காவல் அதிகாரியை நியமிக்க வேண்டும். இந்த நியமனங்களுக்கு பின்பற்றப்படும் நடைமுறை என்ன? என்பது குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும். சிறார்களின் மறுவாழ்வுக்கு விரிவான வரைவு வழிகாட்டு விதிகளை வகுக்க வேண்டும்.  தமிழகத்தில் உள்ள அனைத்து சிறார் காப்பகங்களிலும் சமூக தணிக்கை செய்ய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என  கோரியிருந்தது.

இந்த வழக்கு  நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர். ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனு தொடர்பாக  தமிழக அரசு வரும் ஜனவரி 20-ஆம் தேதிக்குள் பதிலளிக்க  உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.