தேமுதிக கூட்டணி குறித்து அடுத்த மாதம் முடிவு: பிரேமலதா அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக கூட்டணி குறித்து அடுத்த மாதம் முடிவு எடுக்கப்படும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார். 
பிரேமலதா விஜயகாந்த் (கோப்புப்படம்)
பிரேமலதா விஜயகாந்த் (கோப்புப்படம்)
Updated on
2 min read

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக கூட்டணி குறித்து அடுத்த மாதம் முடிவு எடுக்கப்படும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார். 

சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்வது குறித்த தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா, மாவட்டச் செயலாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டனர். 

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் நீடிப்பதா அல்லது மூன்றாவது அணி அமைப்பதா என்பது குறித்து  ஆலோசித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

எனினும் தேர்தலில் தேமுதிக கூட்டணி குறித்து அடுத்த மாதம்  நடைபெறவுள்ள செயற்குழு - பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். 

மேலும், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும், விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண மத்திய அரசு குழு அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com