எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

சென்னை மதுரவாயல் பாலத்தில் சிக்கிய லாரி மீட்பு

சென்னை மதுரவாயல் பகுதியில் பாலத்தின் அடியில் சிக்கிய கண்டெய்னர் லாரியை அகற்றும் பணியின் போது எதிர்பாராத விதமாக லாரியில் தீப்பிடித்தது. தொடர்ந்து லாரியை பாலத்தில் இருந்து மீட்புப் படையினர் வெளியே மீட்ட

News image
கோப்பிலிருந்து..
Updated On :16 டிசம்பர் 2020, 12:17 pm

DIN


சென்னை: சென்னை மதுரவாயல் பகுதியில் பாலத்தின் அடியில் சிக்கிய கண்டெய்னர் லாரியை அகற்றும் பணியின் போது எதிர்பாராத விதமாக லாரியில் தீப்பிடித்தது. தொடர்ந்து லாரியை பாலத்தில் இருந்து மீட்புப் படையினர் வெளியே மீட்டனர்.

மிகப்பெரிய கண்டெய்னர் லாரியில் மின்மாற்றி ஏற்றப்பட்டு சாலையில் வந்து கொண்டிருந்த போது, சென்னை மதுரவாயல் பாலத்தின் அடியில் லாரி சிக்கிக் கொண்டது.

இதனால் அப்பகுதியில் காலை முதலே கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கண்டெய்னர் லாரியை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்றது.

லாரியை அப்பகுதியில் இருந்து அகற்ற, பாலத்தின் அடியில் சிக்கிக் கொண்ட மின் மாற்றியின் மேல்பகுதியை வெல்டிங் மூலம் குறைக்கும் போது, எதிர்பாராத விதமாக மின்மாற்றி தீப்பிடித்து எரிந்தது. இதனால் நிலைமை விபரீதமானது. எனினும், மீட்புக் குழுவினர் சாமர்த்தியமாக செயல்பட்டு, உடனடியாக லாரியை இயக்கி பாலத்தில் இருந்து மீட்டனர். இதனால், அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.