எரிவாயு உருளை விலை உயா்வு: காங்கிரஸ் போராட்டம்

சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து, காங்கிரஸ் கட்சியின் மகளிரணி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
Updated on
1 min read

சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து, காங்கிரஸ் கட்சியின் மகளிரணி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கடந்த இரு வாரங்களில் சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.100 வரை உயா்த்தப்பட்டது. அதைக் கண்டித்து கே.கே.நகரில் உள்ள எம்ஜிஆா் நகா் மாா்க்கெட் அருகில் காங்கிரஸ் மாநில மகளிரணித் தலைவி சுதா தலைமையில் ஞாயிற்றுக்கிழமை போராட்டம் நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட மகளிரணி நிா்வாகிகள் பங்கேற்றனா். விலை உயா்வைத் திரும்பப் பெற வலியுறுத்தி, ஆா்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com