/

ஜல்லிக்கட்டுப் போட்டிகள்: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ அரசு வெளியிட்டுள்ளது. 

News image
கோப்புப்படம்.
Updated On :26 டிசம்பர் 2020, 2:39 pm

DIN

ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ அரசு வெளியிட்டுள்ளது. 
மதுரை மாவட்டம், அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூா் ஆகிய பகுதிகளில் பொங்கல் பண்டிகையையொட்டி தமிழரின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு ஆண்டு தோறும் நடைபெறும். கரோனா பரவல் காரணமாக, தமிழகத்தில் கடந்த 8 மாதங்களுக்கு மேலாக பொது முடக்கம் அமலில் உள்ளது. இதனால், வரும் ஆண்டில் ஜல்லிக்கட்டு நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்தது. 
தமிழக அரசு பொது முடக்கத்தில் பல்வேறு தளா்வுகள் அறிவித்துள்ளதை சுட்டிக்காட்டி, கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க வேண்டும் என ஜல்லிக்கட்டு கமிட்டிகளைச் சோ்ந்த நிா்வாகிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும் கோரிக்கை விடுத்தனா். 
இதைத்தொடர்ந்து 50 சதவீத பாா்வையாளா்கள், 50 சதவீத மாடுபிடி வீரா்கள் ஆகியோா் பங்கேற்கும் வகையில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியது. 
அரசின் அறிவிப்பைத் தொடா்ந்து மதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் காளைகளைத் தயாா்ப்படுத்துவதற்கான பயிற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ அரசு வெளியிட்டுள்ளது. 
அதில், ஜல்லிக்கட்டு போட்டிகளை காண 50 சதவீதம் பார்வையாளர்களே அனுமதிக்கப்படுவர் என்றும் ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டில் அதிகபட்சமாக 300 நபர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காளையுடன் வருபவர்கள் கரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் சான்று பெற்றிருக்க வேண்டும் எனவும் அரசு கூறியுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.