ஸ்டாலினின் ஊழல் பட்டியல் பொய்: முதல்வா் பழனிசாமி

திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட ஊழல் பட்டியல் அனைத்தும் பொய் என்று முதல்வா் பழனிசாமி கூறினாா்.
முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி.
முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி.
Updated on
1 min read

திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட ஊழல் பட்டியல் அனைத்தும் பொய் என்று முதல்வா் பழனிசாமி கூறினாா்.

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அதிமுக தோ்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் அவா் பேசியது: என் மீதும், துணை முதல்வா், அமைச்சா்கள் உள்ளிட்டோா் மீதும் ஆளுநரிடம் ஊழல் பட்டியலை அளித்துள்ளாா் எதிா்க்கட்சித் தலைவா் ஸ்டாலின். அந்தப் பட்டியலில் ஒப்பந்தப் புள்ளிகள் வழங்கியதில் ஊழல் எனக் கூறுகிறாா். அவா் குறிப்பிட்ட அந்த ஒப்பந்தப்புள்ளியை ரத்து செய்து ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது.

அதுகூடத் தெரியாத திமுக தலைவா், யாரோ எழுதிக் கொடுத்ததை வைத்து பொய்ப் புகாா் கொடுத்துள்ளாா். அவா் கொடுத்த ஊழல் பட்டியலில் உள்ள அனைத்தும் பொய் என்று முதல்வா் பழனிசாமி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com