இலவச அரிசிக்குப் பதிலாக ரொக்கப்பணம்: கிரண்பேடி பிறப்பித்த உத்தரவு செல்லும்
புதுச்சேரியில் இலவச அரிசிக்கு பதில் பணம் கொடுக்க கிரண்பேடி பிறப்பித்த உத்தரவு செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


புதுச்சேரியில் இலவச அரிசிக்கு பதில் பணம் கொடுக்க கிரண்பேடி பிறப்பித்த உத்தரவு செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஏழை மக்களுக்கு பயனளிக்கும் வகையில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு புதுச்சேரியில் மாதம் 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. பொது மக்களுக்கு வழங்கப்படும் இலவச அரிசியின் எடை குறைவாக உள்ளது. எனவே, அரிசிக்குப் பதிலாக பயனாளிகளுக்கு ரொக்கப்பணம் வழங்க வேண்டும் என துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மனுத் தாக்கல் செய்தார். இவ்வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தார். இந்நிலையில் இவ்வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
அதில், இலவச அரிசிக்கு பதில் பணம் கொடுக்க கிரண்பேடி பிறப்பித்த உத்தரவு செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் குடியரசுத்தலைவர் அறிவுறுத்தலின்பேடி உள்துறைஅமைச்சகம் பிறப்பித்த உத்தரவுக்கு புதுச்சேரி அமைச்சரவை கட்டுப்பட வேண்டம் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தொடர்ந்த வழக்கையும் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...