மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மேட்டூர் அருகே பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை கொலை

மேட்டூர் அருகே பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை அடித்துக்கொலை செய்யப்பட்டார். 

News image
Updated On :27 பிப்ரவரி 2020, 7:44 am

DIN

மேட்டூர் அருகே பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை அடித்துக்கொலை செய்யப்பட்டார். 

மேட்டூரை அடுத்த ஜலகண்டபுரம் ஆவடத்தூரை சேர்ந்தவர் படவெட்டி (40)கூலி தொழிலாளி. இவரது மனைவி நிலா வயது 35. இவர்களுக்கு 2 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். நிலா தனது தாய் வீட்டில் விசைத்தறி அமைத்து நெசவுத் தொழில் செய்து வருகிறார். கணவன் மனைவி இருவருக்கும் ஏற்பட்ட குடும்ப பிரச்னை காரணமாக சில ஆண்டுகள் பிரிந்திருந்தனர். 

கடந்த 20 நாட்களுக்கு முன்பு நிலா மாமியார் வீட்டிற்குச் சென்று தனது கணவரை சேர்ந்து வாழலாம் என கூறி அழைத்து வந்தாராம். இந்நிலையில் நேற்று நள்ளிரவு படவெட்டி தலையில் கல்லால் தாக்கப்பட்டு இறந்துகிடந்தார். அவர் படுத்திருந்த கட்டில் உடைந்து இருந்தது. தகவலறிந்த ஜலகண்டபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். 

விசாரணையில் படவெட்டி மதுபோதையில் தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் அதனால் அவரது மகளே கிரைண்டர் கல்லால் தாக்கி கொலை செய்ததாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆனால் பட ரெட்டியின் சகோதரர் இது திட்டமிட்ட கொலை என்று போலீசில் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து ஜலகண்டபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.