வாடிப்பட்டியில் உறுப்பினர்கள் வராததால் தேர்தல் ஒத்திவைப்பு
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உறுப்பினர்கள் வராததால் மறைமுகத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உறுப்பினர்கள் வராததால் மறைமுகத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மதுரை வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 14 வார்டுகள் உள்ளன. இதில் அதிமுக 7 வார்டுகளிலும், திமுக 6 வார்டுகளிலும் வெற்றி பெற்றது. சுயேச்சை உறுப்பினர் ஒரு வார்டில் வெற்றி பெற்றார். இந்நிலையில் சுயேச்சை உறுப்பினர் ஆதரவு திமுகவுக்கு கிடைத்ததால் ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவியை பிடித்து விடலாம் என்பதால், மறைமுகத் தேர்தலுக்கு அதிமுக உறுப்பினர்கள் சுயேச்சை உறுப்பினருடன் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு வந்தனர்.
ஆனால் மறைமுகத் தேர்தலுக்கு திமுக உறுப்பினர்களும், அதிமுகவைச் சேர்ந்த ஒரு உறுப்பினரும் வரவில்லை. மொத்த உறுப்பினர்களில் பாதிக்கு மேல் அதாவது 8 உறுப்பினர்கள் வருகை இருந்தாலே தேர்தலை நடத்த முடியும். ஆனால், தற்போது 7 உறுப்பினர்கள் மட்டுமே வருகை தந்துள்ளனர். இதனால் 12 மணி வரை தேர்தல் தொடங்கப்படாமல் இருந்தது. அதன்பின்னரும் உறுப்பினர்கள் வராததால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதாக தேர்தல் அலுவலர் அறிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...