மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நீட் தேர்வு 2020: தமிழகத்தில் விண்ணப்பித்தோர் எண்ணிக்கை 17% சரிவு

2020ம் ஆண்டில் நடைபெற உள்ள நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 17% சரிவடைந்துள்ளது. 

News image
Updated On :23 ஜனவரி 2020, 5:48 am

DIN


சென்னை: 2020ம் ஆண்டில் நடைபெற உள்ள நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 17% சரிவடைந்துள்ளது. 

2018 - 19ம் ஆண்டை ஒப்பிடுகையில், தமிழகத்தில் 17% பேர் குறைவாகவே நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் நிலையில், நாடு முழுவதும் என்று எடுத்துக் கொண்டால், நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருப்பவர்களின் எண்ணிக்கை 74,000 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய தேர்வுகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

பல்வேறு காரணங்களால், தமிழகத்தில் இருந்து நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கைக் குறைந்திருப்பதாக ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.

பல முறை தேர்வு எழுதும் மாணவர்களே அதிகளவில் நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவதும், கட்-ஆப் அதிகமாக இருப்பதும், ஆள்மாறாட்ட சம்பவங்களால் சில மாணவ, மாணவிகள் அதிருப்தியில் இருப்பதாலும் இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கைக் குறைந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

கடந்த 2019ம் ஆண்டு எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்த 4,202 மாணவர்களில் 2,916(70%) பேர் பழைய மாணவர்கள். அதனால், 2019ல் நீட் தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் சிலர் இந்த ஆண்டு இடைவெளி விட்டுவிட்டு, நன்கு பயிற்சி எடுத்துக் கொண்டு அடுத்த ஆண்டில் நீட் தேர்வு எழுதிக் கொள்ளலாம் என்று முடிவெடுத்திருப்பதாகவும் சில மாணவர்கள் கூறுகிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.