மதுரையில் இன்று 259 பேருக்கு கரோனா: பாதிப்பு 3,117 ஆக உயர்வு
மதுரை மாவட்டத்தில் மேலும் 259 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


மதுரை மாவட்டத்தில் மேலும் 259 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கரோனா தொற்று அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகக் கரோனா தீநுண்மி தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட நிலையில், கரோனா தொற்று பரவல் வேகமெடுத்துள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மூன்றாயிரத்தைத் தாண்டியிருக்கிறது.
இந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் ஒரே நாளில் புதிதாக 259 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்பு 3,117 ஆக உயர்ந்துள்ளது. இந்த நோய்த் தொற்று பாதிக்கப்பட்ட 879 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 39 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...