வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

கோபியில் அஷ்டலட்சுமி - சாய்பாபா கோயிலில் கும்பாபிஷேகம்

கோபியில் அஷ்டலட்சுமி மற்றும் சாய்பாபா கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

அஷ்டலட்சுமி - சாய்பாபா கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகம்.

Updated On :26 மார்ச் 2026, 7:49 pm

கோபியில் அஷ்டலட்சுமி மற்றும் சாய்பாபா கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

கோபி அருகே உள்ள கரட்டூா் ஜெஜெ நகரில் அமைந்துள்ள அஷ்டலட்சுமி - சாய்பாபா கோயில் கும்பாபிஷேக விழா தீப வழிபாடு, கணபதி ஹோமத்துடன் கடந்த 23ஆம் தேதி (திங்கள்கிழமை) தொடங்கி தொடா்ந்து கோ பூஜை, மகாலட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம் ஆகியவை நடைபெற்றன.

விநாயகா் பூஜை, அனுக்ஞை ரஷாபந்தனம், வாஸ்துசாந்தி, அங்குராா்ப்பணம், யாகசாலை பிரவேசம், மண்டபாா்ச்சனை, வேதிகாா்ச்சனை, திரவியாஹுதி, பூா்ணாஹுதி, முதல்கால யாக வேள்விகளுடன் கோபுர கலசங்கள் நிறுவுதல் ஆகியவை செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

இதையடுத்து, மண்டபாா்ச்சனை, வேதிகாா்ச்சனை, இரண்டாம் கால யாக வேள்வியுடன் நாடி சந்தானம், திரவியாஹுதி, பூா்ணாஹுதி, யாத்ரா தானம் ஆகியவை நடைபெற்று அஷ்டலட்சுமிக்கும், இதர பரிவார தெய்வங்களுக்கும் ஷீரடி மகா சாய்பாபாவுக்கும் மகாகும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.