

ராமேசுவரம் நகராட்சி பகுதிகளில் உள்ள கழிவுநீர் கால்வாய்களை சுத்தம் செய்யும் தூய்மைப் பணியாளர்கள் கையுறை மற்றும் முகக்கவசம் இன்றி பணியில் ஈடுபடுவதால் நோய்த் தொற்றுக்கு உள்ளாகி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளது. சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்டுள்ளது. நகராட்சியில் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் 144 பேரும், நிரந்தர தூய்மைப் பணியாளர்கள் 26 பேர் உள்ளனர். இவர்கள் நகராட்சி பகுதிக்குட்பட்ட அனைத்து இடங்களிலும் தூய்மைப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் கரோனா நோய்த் தடுப்பு பணியிலும் ஈடுபட்டுள்ளனர். மேலும் கழிவு நீர் கால்வாய் அடைப்பு ஏற்படும் அதனைச் சீர் செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி தூய்மைப் பணியாளர்களுக்குப் பாதுகாப்பு உபகரணங்கள் கையுறை மற்றும் முகக்கவசம் உள்ளிட்ட பொருள்கள் முறையாக வழங்கவில்லை, இதனால் கரோகா நோய்த் தடுப்பு மற்றும் தூய்மை பணியில் ஈடுபடும் பணியாளர்கள் பாதுகாப்பற்ற முறையில் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் கழிவுநீர் கால்வாய் அடைப்புகளைச் சரிசெய்யும் பணியாளர்கள் பாதுகாப்பு உபகரணமின்றி பணியில் ஈடுபடுவதால் பல்வேறு நோய்த் தொற்றுக்கு ஆலாகி வருகின்றனர். ராமேஸ்வரம் சுகாதார பணிகளுக்குப் பலகோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும் நகராட்சி சுகாதாரத்துறை தூய்மை பணியாளர்களுக்குப் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கிடவில்லை எனப் புகார் எழுந்துள்ளது. இதனை உடனே சரி தூய்மைப் பணியாளர்களுக்குப் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கிட வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.