மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஈரோட்டில் புதிதாக அமைக்கப்பட்ட மதுபானக் கடைக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம்

ஈரோட்டில் டாஸ்மாக் கடை அமைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினர்
Updated On :25 ஜூலை 2020, 9:55 am

DIN

ஈரோட்டில் டாஸ்மாக் கடை அமைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு ஆணைக்கல்பாளையம் அருகே  கடந்த சில மாதங்களுக்கு முன்பு டாஸ்மாக் கடை அமைக்க வேலைகள் நடந்து வந்தது. டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் எனத் தெரிவித்து அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

மேலும் இது தொடர்பாக அப்பகுதி பொதுமக்கள் ஏற்கனவே கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்து கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில் ஆணைக்கல்பாளையம் ரிங் ரோடு அருகே நேற்று புதிதாக கட்டப்பட்ட டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் இன்று டாஸ்மாக் கடையை முற்றுகையிட போவதாக இந்துமுன்னணி மற்றும் அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்திருந்தனர் இதையடுத்து இன்று காலை அப்பகுதி காவல்துறையினர் 50க்கும் மேற்பட்டோர் டாஸ்மாக் கடை முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்து முன்னணி மாவட்ட செயலாளர் கார்த்திக் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் டாஸ்மாக் கடையை முற்றுகையிட அங்கு திரண்டு வந்தனர்.

இதையடுத்து பொதுமக்கள் ரிங் ரோடு அருகே திரண்டு வந்து டாஸ்மாக் கடைக்கு எதிராக கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சிறிது நேரத்தில் அவர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.