தமிழகத்தில் புதிதாக 6,986 பேருக்கு கரோனா
தமிழகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 6,986 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


தமிழகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 6,986 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய இன்றைய செய்திக் குறிப்பை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தில் இன்று புதிதாக 6,986 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 1,155 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 2,13,723 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய அறிவிப்பில் மேலும் 85 பேர் (அரசு மருத்துவமனை -49, தனியார் மருத்துவமனை -36) பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பலி எண்ணிக்கை 3,494 ஆக உயர்ந்துள்ளது.
அதேசமயம் இன்று மேலும் 5,471 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 1,56,526 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய தேதியில் 53,703 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் இன்று மட்டும் 64,129 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 23,51,463 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் 58 அரசு ஆய்வகங்கள், 58 தனியார் ஆய்வகங்கள் என மொத்தம் 116 கரோனா பரிசோதனை ஆய்வகங்கள் செயல்பாட்டில் உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...