/

சென்னையில் 1,138 பேர்; பிற மாவட்டங்களில் 5,855 பேர்: மாவட்டவாரியாக பாதிப்பு விவரம்

சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இன்று (திங்கள்கிழமை) 5,855 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :27 ஜூலை 2020, 1:00 pm

DIN


சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இன்று (திங்கள்கிழமை) 5,855 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது.

தமிழகத்தில் இன்றைய கரோனா பாதிப்பு குறித்த விவரங்களை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தில் புதிதாக 6,993 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் மொத்த பாதிப்பு 2,20,716 ஆக உயர்ந்துள்ளது. 

இதில், அதிகபட்சமாக சென்னையில் 1,138 பேருக்கு தொற்று உறுதியான நிலையில் மொத்த பாதிப்பு 95,857 ஆக அதிகரித்துள்ளது. சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் இன்று 5,855 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இன்று பாதிப்பில், சென்னைக்கு அடுத்தபடியாக திருவள்ளூர் மாவட்டத்தில் 474 செங்கல்பட்டு மாவட்டத்தில் 448 பேருக்கும், , காஞ்சிபுரத்தில் 362 பேருக்கும், தூத்துக்குடியில் 349 பேருக்கும், விருதுநகரில் 338 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாவட்டவாரியாக விவரம்: இங்கே க்ளிக் செய்யவும்..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.