/

தமிழகத்தில் புதிதாக 6,972 பேருக்கு கரோனா தொற்று; ஒரேநாளில் 88 பேர் பலி

தமிழகத்தில் புதிதாக 6,972 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :28 ஜூலை 2020, 1:14 pm

DIN

தமிழகத்தில் இன்று புதிதாக 6,972 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்றைய கரோனா பாதிப்பு குறித்த விவரங்களை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தில் இன்று புதிதாக 6,972 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் மொத்த பாதிப்பு 2,27,688 ஆக உயர்ந்துள்ளது.

இதில், அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 1,107 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு 96,438 ஆனது.

இன்றைய பாதிப்பில் தமிழகத்தில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் 6,908 பேர். வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் 64 பேர்.

மேலும் ஒரேநாளில் 88 பேர் (அரசு மருத்துவமனை -65, தனியார் மருத்துவமனை -23)  பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து பலி எண்ணிக்கை 3,659 ஆக உயர்ந்துள்ளது.

அதேசமயம் இன்று மட்டும் 4,707 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 1,66,956 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய தேதியில் 54,896 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் இன்று மட்டும் 61,153 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 24,75,866 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் 58 அரசு ஆய்வகங்கள், 61 தனியார் ஆய்வகங்கள் என மொத்தம் 119 கரோனா பரிசோதனை ஆய்வகங்கள் செயல்பாட்டில் உள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.