புதுச்சேரியில் ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் வேளையில் ஆளுநர் கிரண்பேடி ஈடுபட்டுள்ளார் என்று முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
புதுவை முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களைச் செவ்வாய்க்கிழமை சந்தித்தார். அப்போது அவர் கூறியது,
புதுச்சேரியில் தற்போது வெளிமாநிலங்கள் மற்றும் அண்டை மாநிலங்களிலிருந்து வரும் மக்களால் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. புதுச்சேரியில் தற்போது அனைத்து கடைகளும் திறக்கப்பட்டுள்ளன. சுற்றுலா தளங்களும் திறக்கப்பட்டுள்ளன. ஆதலால் புதுவை மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
புதிய பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வந்த தற்காலிக காய்கறி மார்க்கெட் மீண்டும் நாளை குபேர் அங்காடி செல்வதால் மிகக் கடுமையான கட்டுப்பாட்டுடன் குபேர் அங்காடி காய்கறி மார்கெட் செயல்பட உத்தரவிட்டுள்ளது. இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு கடுமையாகப் பின்பற்ற அறிவுறுத்தியுள்ளது. 50 பேர் திருமணத்தில் கலந்துகொள்ளலாம் அதைத் திருமண மண்டபங்களில் நடத்த அனுமதிக்கப்படும்.
மேலும், அனைத்து வங்கி அதிகாரிகளையும் அழைத்து மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு எந்தவித உத்தரவாதம் இன்றி ரூ.50 ஆயிரம் கடனுதவி வழங்க உத்தரவிட்டுள்ளது. எந்த புகாரையும் விசாரிக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் வேளையில் கிரண்பேடி ஈடுபட்டுள்ளார்.
கடந்த நான்கு ஆண்டுகளாக ஜனநாயகத்தை மதிக்காமல் விதிமுறைகளைப் பற்றிக்கூடக் கவலைப்படாமல் புதுவை மாநில மக்களுக்குத் துரோகம் இழைத்து வருகிறார். அவரால் 4 ஆண்டுகளாக சாதனை ஏதும் இல்லை, மக்களுக்கு வேதனை தான் என்றார் முதல்வர் நாராயணசாமி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழகத்தில் 10 இடங்களில் சதமடித்த வெய்யில்!

தெலுங்கில் மட்டுமே 15 கோடி பார்வைகள், 16 லட்சம் லைக்குகள் பெற்ற நானியின் பாடல்!

இன்றைய செய்திகள் மே 26 - நேரலை!
‘க்வாட்’ கூட்டமைப்பு வெளியுறவு அமைச்சா்கள் கூட்டம்: சீனா எதிர்வினை!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



