/

புதுச்சேரியிலும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து: அமைச்சர் அறிவிப்பு

தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அம்மாநில கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் அறிவித்துள்ளார். 

News image
Updated On :9 ஜூன் 2020, 8:05 am

DIN

தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் அறிவித்துள்ளார். 

தமிழகத்தில் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவதாகவும் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி சற்றுமுன் அறிவிப்பு வெளியிட்டார்.

இதையடுத்து, புதுச்சேரியிலும் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் அறிவித்துள்ளார். மேலும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள் எனவும் கூறியுள்ளார். 

முன்னதாக, 10- ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழக அரசின் முடிவைப் பொறுத்து முடிவு செய்யப்படும் என புதுச்சேரி அரசு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

தொடர்ந்து இதுகுறித்து முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: 

தமிழக பாடத் திட்டங்களின் அடிப்படையிலே புதுச்சேரி அரசிலும் பாடத்திட்டங்கள் பின்பற்றப்பட்டு வருகிறது. தமிழக அரசு 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்வதாக அறிவித்துள்ளதால் புதுச்சேரியிலும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுகிறது. 

மாணவர்கள் காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் எடுத்த மதிப்பெண்களின் அடிப்படையிலும், வருகைப் பதிவேடு அடிப்படையிலும் தேர்ச்சி கொடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.