சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 131 பேருக்கு கரோனா தொற்று

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 131 பேர் கரோனா வைரஸ் தொற்றுக்குப் பாதிக்கப்பட்டுள்ளனர். 

News image
Updated On :18 ஜூன் 2020, 9:47 am

DIN

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 131 பேர் கரோனா வைரஸ் தொற்றுக்குப் பாதிக்கப்பட்டுள்ளனர். 

கடந்த சில நாள்களாக தமிழகத்தில் கரோனா பாதிப்பு கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், சென்னைக்கு அடுத்தபடியாக திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகளவில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. 

சென்னையை ஒட்டியுள்ள மண்டலங்களில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதன்படி பூவிருந்தமல்லி 24, ஆவடி 15, திருவேற்காடு 13 உள்ளிட்ட இடங்களைத் தொடர்ந்து, ஒரே நாளில் 131 பேருக்கு கரோனா தொற்று பாதித்துள்ளது. 

இந்நிலையில், நேற்று வரை கரோனா பாதிப்பு 2,011 ஆக இருந்த நிலையில், இன்று புதிதாக 131 பேருக்குத் தொற்று உறுதியாகியுள்ள நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 2,168 ஆக உயர்ந்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.