சென்னை: அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு கரோனா பாதிப்பு இல்லை என்று சென்னை அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு கரோனா தொற்று உறுதியானதாக ஞாயிறன்று தகவல்கள் பரவத்துவங்கின.
இதையடுத்து அமைச்சர் சி.வி. சண்முகத்துக்கு கரோனா நோய்த் தொற்று இல்லை என தமிழக சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டது.
இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை, அமைச்சர் சி.வி. சண்முகத்தின் கரோனா பரிசோதனை முடிவை வெளியிட்டுள்ளது. அதில், அவருக்கு கடந்த 18 ஆம் தேதி கரோனா பரிசோதனைக்காக மாதிரிகள் எடுக்கப்பட்டதாகவும், அதைத் தொடர்ந்து 19 ஆம் தேதி பரிசோதனை முடிவுகள் வந்ததாகவும் அதில் சி.வி. சண்முகத்துக்கு கரோனா தொற்று இல்லை என்று தெரிய வந்ததாகவும் அறிக்கைகளுடன் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு கரோனா பாதிப்பு இல்லை என்று சென்னை அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
அவருக்கு நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் ‘நெகட்டிவ்’ என முடிவு வந்துள்ளதாக, அப்போலா மருத்துவமனை ஞாயிறு இரவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் முந்திய அறிக்கை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எரிபொருள் விலை உயர்வால் கேரளத்தில் பணவீக்கம் அதிகரிப்பு: முதல்வர்

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி, ஒருநாள் தொடருக்கான ஆப்கன் அணி அறிவிப்பு!

விருதுநகரில் 23 கல்குவாரிகளை மூட உத்தரவு! தென்காசியில் நேற்று 18!

ஜே.கே டயர் Q4 நிகர லாபம் 80% உயர்வு!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



