இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

கரோனா பரவலை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை: மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் அறிவுறுத்தல்

மாநிலம் முழுவதும் கரோனா பரவலை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் சண்முகம் அறிவுறுத்தியுள்ளார்.

News image
தலைமைச் செயலாளர் சண்முகம்
Updated On :22 ஜூன் 2020, 12:11 pm

DIN

சென்னை: மாநிலம் முழுவதும் கரோனா பரவலை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் சண்முகம் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் கரோனாவின் தாக்கம் தீவிரமாக இருப்பதால், அதனைக் கட்டுப்படுத்தும் விதமாக  வரும் 30-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மாநிலத்தின் இதர மாவட்டங்களிலும் அதிகரித்து வரும் தொற்று எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் மாநிலம் முழுவதும் கரோனா பரவலை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் சண்முகம் அறிவுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு திங்களன்று அவர் எழுதியுள்ள கடிதத்தில், ‘கரோனா பரவலை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கரோனா பாதிப்புகளை முன்கூட்டியே கண்டறிய குறிப்பிட்ட பகுதிகளில் முகாம்களை நடத்தி  பரிசோதனைகளை தீவிரப்படுத்த வேண்டும் மற்றும் கரோனா எந்தப் பகுதியையும் பாதிக்காதவாறு மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும்’ என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.