கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

கோவையில் தொடங்கியது கோனியம்மன் கோயில் தேரோட்டம்

கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோயில் தேரோட்டத்தை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று மதியம் 2 மணிக்கு வடம் பிடித்து துவக்கி வைக்கிறார்.

News image
Updated On :4 மார்ச் 2020, 11:15 am

DIN


கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோயில் தேரோட்டம் இன்று (புதன்கிழமை) மதியம் தொடங்கியது.

கோவை மாநகரின் காவல் தெய்வமாக விளங்கி வரும் கோனியம்மன் கோயில் மாசித் தேர்த் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது.

Story image

இத்தேரோட்டத்தின்போது ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று திருத்தேர்மீது உப்பு வீசி வழிபாடு மேற்கொள்வர். இந்த ஆண்டுக்கான தேர்த் திருவிழா கொடியேற்றத்துடன் பிப்ரவரி 25 ஆம் தேதி தொடங்கியது. இதைத் தொடர்ந்து அம்மனுக்கு தினமும் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்று வந்தன. 

தினமும் மாலையில் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருத்தேரில் எழுந்தருள்வதற்காக கோயிலில் இருந்து அம்மன் புறப்பாடு காலை 5 மணிக்கு நடைபெற்றது. தேர் வடம்பிடித்தல் பிற்பகல் 2 மணிக்கு நடைபெற்றது.

Story image

தேர்நிலையில் இருந்து புறப்பட்டுள்ள தேர், ராஜவீதி, ஒப்பணக்கார வீதி, வைசியாள் வீதி, கருப்பக்கவுண்டர் வீதி மற்றும் ராஜவீதி வழியாக மாலை 6 மணிக்கு நிலையை அடைவதாக கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

தேரின் பின் தீயணைப்பு வாகனம், அவசர ஊர்தி போன்ற வாகனங்கள் செல்வதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றிருப்பதால் பாதுகாப்புக்கு 500க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Story image

பக்தர்களின் வசதிக்காக மருத்துவ முகாம், குடிநீர், கழிப்பறை போன்ற அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கோயில் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.