இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

கரோனாவால் பாதிக்கப்பட்டவருக்கு சிகிச்சை அளித்த செவிலியர்கள் தனிமையில் வைப்பு

கும்பகோணம்: கும்பகோணத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபருக்குச் சிகிச்சை அளித்த செவிலியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

News image
Updated On :29 மார்ச் 2020, 11:22 am

DIN

கும்பகோணம்: கும்பகோணத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபருக்குச் சிகிச்சை அளித்த செவிலியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கும்பகோணத்தில் மேற்கிந்திய தீவுகளிலிருந்து வந்தவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பதாகப் பரிசோதனையில் சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதனிடையே, அவர் சளி, இருமல், காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவதற்காக கும்பகோணத்திலுள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு அவருக்கு 5 செவிலியர்கள் சிகிச்சை அளித்தனர்.

எனவே, 5 செவிலியர்களும் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும், கரோனாவால் பாதிப்புக்குள்ளான கும்பகோணத்தைச் சேர்ந்தவரின் மனைவி மற்றும் சகோதரர் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதேபோல, பாதிக்கப்பட்டவர் வசித்து வரும் தெருவைச் சேர்ந்த 75 வயது மூதாட்டிக்கு சளி, இருமல், காய்ச்சல் சில நாட்களாக இருப்பது தெரிய வந்தது. அவரை கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிறப்புப் பிரிவில் தனிமைப்படுத்தி மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.