கரோனா: ஐஏஎஸ் அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.


கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
கரோனா வைரஸ் உலகை அச்சுறுத்திக் கொண்டே வருகிறது. இந்தியாவிலும் மெல்ல மெல்ல ஊடுருவி தற்போது தமிழகத்திலும் இதன் தாக்கம் எதிரொலித்துள்ளது. இதனை அடுத்து கரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் ஒன்றிணைந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன்படி கடந்த 25ஆம் தேதி முதல் தொடர்ந்து 21 நாட்களுக்கு இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வரும் ஆலோசனை கூட்டத்தில் டிஜிபி, தலைமைச் செயலர், ஊரடங்கை கண்காணிக்க, அத்தியாவசியப் பொருள் கிடைக்க அமைக்கப்பட்ட 9 குழுவினர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். மேலும் கூட்டத்தில் சமூக இடைவெளியுடன் அமைச்சர்கள், அதிகாரிகள், கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...