தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

தற்போது பாதிப்பு கண்டறியப்படுபவர்களில் பெரும்பாலானோருக்கு அறிகுறி இல்லை: ராதாகிருஷ்ணன்

தற்போது பாதிப்பு கண்டறியப்படுபவர்களில் பெரும்பாலானோருக்கு அறிகுறி இல்லை என்று கரோனா தடுப்புப் பணிகள் சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :4 மே 2020, 6:29 am

DIN

தற்போது பாதிப்பு கண்டறியப்படுபவர்களில் பெரும்பாலானோருக்கு அறிகுறி இல்லை என்று கரோனா தடுப்புப் பணிகள் சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து சென்னை கோயம்பேட்டில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கோயம்பேடு சுற்றுவட்டார பகுதிகளில், கரோனா பரிசோதனை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோயம்பேட்டுடன் தொடர்புடைய அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழகத்தில் இறப்பு விகிதம் குறைவு. 

மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை, அதே சமயம் அலட்சியமாகவும் இருக்கக் கூடாது. முகக்கவசம் அணிவதை மக்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். இந்தியாவிலேயே குணமடைந்தோர் எண்ணிக்கை தமிழகத்தில்தான் மிக அதிகம். தற்போது பாதிப்பு கண்டறியப்படுபவர்களில் பெரும்பாலானோருக்கு அறிகுறி இல்லை. பரிசோதனை மூலமே பாதிப்பு தெரியவந்துள்ளது. 

பரிசோதனையை அதிகரிப்பதால் பாதிப்பு அதிகமாக தெரிய வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். ஆசியாவின் மிகப்பெரிய காய்கறிகள் மற்றும் பழ சந்தையாக விளங்கும் கோயம்பேட்டில் கடந்த சில நாள்களுக்கு முன்பு வியாபாரிகள் சிலருக்கு நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து கோயம்பேடு வளாகத்தில் தொடா் மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

அதன்படி, இதுவரை சென்னையில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தவிர கோயம்பேடு சந்தைக்கு வந்து சென்ற வெளி மாவட்டங்களைச் சோ்ந்தவா்களும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.