அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கக் கோரி சேலத்தில் பிகார் தொழிலாளர்கள் மறியல் 

சேலத்தில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கக் கோரி மறியலில் ஈடுபட்ட பிகார் தொழிலாளர்களை காவல்துறையினர் வேனில் ஏற்றி அவரவர் பகுதிகளுக்குத் திருப்பி அனுப்பி வைத்தனர்.

News image
Updated On :18 மே 2020, 8:30 am

DIN

சேலத்தில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கக் கோரி மறியலில் ஈடுபட்ட பிகார் தொழிலாளர்களை காவல்துறையினர் வேனில் ஏற்றி அவரவர் பகுதிகளுக்குத் திருப்பி அனுப்பி வைத்தனர்.

சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட ரெட்டியூர் மற்றும் பனங்காடு, சிவதாபுரம், கொண்டலாம்பட்டி, பெரிய புதூர் உள்ளிட்ட பகுதிகளில் பிகார் மாநிலத்தைச் சேர்ந்த திரளான தொழிலாளர்கள் வெள்ளி பட்டறைகளில் பணியாற்றி வருகின்றனர்.  மேலும் சிலர் கட்டட வேலைக்கும் சென்று வருகின்றனர். 

Story image

கடந்த 10 நாட்களுக்கு முன்பு வெளிமாநில தொழிலாளர்கள் யார் யார் சேலத்தில் உள்ளனர் என்றும், இவர்களில் சொந்த ஊர் செல்ல விருப்பம் உள்ளவர்கள் யார் என்றும், அந்தந்த பகுதியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் கணக்கெடுக்கப்பட்டது. இந்த நிலையில் திங்கள்கிழமை காலை 10 மணி அளவில் நூற்றுக்கும் மேற்பட்ட பிகார் தொழிலாளர்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள மாவட்ட ஊராட்சி அலுவலகம் பகுதிக்குத் திரண்டு வந்தனர். பின்னர் பிகார் தொழிலாளர்கள் தரையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது. 

இதனை அறிந்த சேலம் நகர உதவி கமிஷனர் ஈஸ்வரன் மற்றும் காவல் ஆய்வாளர் குமார் தலைமையிலான காவல்துறையினர் அங்கு வந்து பிகார் மாநில தொழிலாளர்களை சமரசம் செய்தனர். மேலும், தொழிலாளர்களிடம் காவல்துறை உயரதிகாரிகள் சந்தித்து அவரவர் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்கிறோம். அதுவரை பொறுத்துக்கொள்ளுமாறு தெரிவித்தனர். ஆனால் பிகார் தொழிலாளர்கள் இதைக் கேட்காமல் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

Story image

இதையடுத்து, பிகார் தொழிலாளர்கள் காவல்துறையினர் கைது செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் பயந்துபோன பிகார் தொழிலாளர்கள் அனைவரும் அருகில் உள்ள சாலை பகுதிகளில்  தப்பிச் சென்றனர். இதனால் அந்த பகுதியில் மேலும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் நான்கு காவல்துறை வாகனங்கள் அங்கு வரவழைக்கப்பட்டு அதில் பிகார் தொழிலாளர்கள் அனைவரும் ஏற்றப்பட்டனர்.  இதன் பிறகு பிகார் தொழிலாளர்களின் பெயர் விவரம், எந்த ஊர் தற்போது எங்கு வசிக்கிறார்கள் எனப் பட்டியல் எடுக்கப்பட்டது.

பின்னர், அவர்கள் அனைவரும் அவரவர் வசிக்கும் பகுதிக்கு காவல்துறை வாகனத்திலேயே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். பிகார் தொழிலாளர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்து பிகாருக்கு அனுப்பி வைக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் அதிகாரிகள் தெரிவித்துத் திரும்பினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.