/

புலம்பெயர் தொழிலாளர்களை செங்கல் சூளை உரிமையாளர் தாக்கியதில் 4 பேர் காயம்

திருவள்ளூர் அருகே கடந்த 2 மாதங்களாக வேலையின்றி அவதிப்பட்டு வரும் சொந்த ஊருக்கு அனுப்ப கூறியதற்காக புலம் பெயர்ந்த தொழிலாளர்களை செங்கல் சூளை உரிமையாளர்

News image
Updated On :20 மே 2020, 12:31 pm

DIN

திருவள்ளூர் அருகே கடந்த 2 மாதங்களாக வேலையின்றி அவதிப்பட்டு வரும் சொந்த ஊருக்கு அனுப்ப கூறியதற்காக புலம் பெயர்ந்த தொழிலாளர்களை செங்கல் சூளை உரிமையாளர் உள்பட சிலர் சேர்ந்து தாக்கியதில் 4 பேர் காயம் அடைந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகளிடம் தொழிலாளர்கள் புகார் தெரிவித்தனர்.

திருவள்ளூர் அருகே புதுப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி(65). இவர் அக்கிராமத்தில் ஜி.டி.எம் என்ற தனியார் செங்கல்சூளையை நடத்தி வருகிறார். இந்த செங்கல் சூளையில் வேலை செய்வதற்காக ஓடிசா மாநிலத்தில் இருந்து கடந்த ஜன மாதம் 326 தொழிலாளர்களை அழைத்து வந்தனர். இந்த நிலையில் ஒரு மாதம் வேலை செய்த நிலையில், தற்போது கரோனா நோய் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் கடந்த 2 மாதங்களாக செங்கல்சூளைகளில் வேலை நிறுத்தப்பட்டிருந்தது. இதனால், நாள்தோறும் வேலைக்க சென்று அதில் கிடைக்கும் வருவாயை கொண்டு குடும்ப நடத்தி வந்த நிலையில், தற்போதைய நிலையில் வருவாய்க்கு வழியின்றியும், உணவுக்கு அவதிப்பட்டும் வந்தனர்.

இதற்கிடையே மத்திய, மாநில அரசுகள் சார்பில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை அவரவர் சொந்த ஊர்களுக்கு சிறப்பு ரயில் மூலம் அனுப்பி வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அப்போது, வேலையின்றி அவதிப்பட்டு வருவதால் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும் படியும் செங்கள்சூளை நடத்துவோரிடம் தொழிலாளர்கள் கூறினார்களாம். அப்போது, வேலையை முடித்துக் கொடுக்காமல் ஊருக்கு அனுப்பி வைக்க முடியாது. இல்லையென்றால் ஏற்கெனவே பெற்ற முன்பணத்தை தொழிலாளர்களிடம் திருப்பி கேட்டு கடும் வாக்கு வாதத்திலும் ஈடுபட்டனர். 

இதனால் ஆத்திரம் அடைந்த செங்கல்சூளை உரிமையாளர் முனுசாமி, அவரது தம்பி லட்சுமிபதி, மேலாளர் ஆசிர்வாதம் உள்பட 4 பேர் சேர்ந்து ஊருக்கு போவதாக கூறிய தொழிலாளர்களை கம்பால் தாக்கினார்களாம். இந்த தாக்குதலில் சனநிர்பியா மகன் சிம்மாபரியா(35), ஆதிகோண்டா மகன் நவாது(30), நித்யாஷ் சுபவ் மகன் கோபால் சுபவ்(30), டிச்சுயூ பரியா மகள் மனிஷாபரியா(20) மற்றும் இளம்பெண் ரிக்டொண்டி(19) ஆகியோர் காயம் அடைந்தனர்.

இது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் அகத்தியனிடம் மனிஷாபிரியா புகார் செய்தனர். அதைத் தொடர்ந்து அவர் கோட்டாட்சியர் மற்றும் வெங்கல் போலீஸôருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் விரைந்த வந்த கோட்டாட்சியர் வித்யா மற்றும் அதிகாரிகள் ஆகியோர் காயம் அடைந்த தொழிலாளர்களை திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து புலம் பெயர்ந்த தொழிலாளர்களிடம் தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணை அதிகாரிகள் மேற்கொண்டனர். 

அதற்கு முன்னதாக புலம்பெயர்ந்த 322 தொழிலாளர்களை அப்பகுதியில் உள்ள தனியார் அரங்கத்தில் தங்க வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு 3 நாள்களுக்கு தேவையான உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு, அதைத் தொடர்ந்து ஆவணங்கள் சரி பார்த்து சிறப்பு ரயில் மூலம் ஓடிசாவிற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையே புலம் பெயர்ந்த தொழிலாளர்களை தாக்கிய சம்பவம் தொடர்பாக செங்கல் சூளை நிர்வாகிகள் மீது   வெங்கல் காவல் நிலைய போலீஸôர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.