கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

திருப்பூரில் 150 இடங்களில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாவட்டத்தில் 150 இடங்களில் தொழிற்சங்கத்தினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

News image
Updated On :22 மே 2020, 10:30 am

DIN

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாவட்டத்தில் 150 இடங்களில் தொழிற்சங்கத்தினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

தொழிலாளர்களின் வேலைநேரத்தை 12 மணி நேரமாக மாற்றும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும். தொழிலாளர்களுக்கு எதிரான சட்டத் திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும். தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.7,500 வீதம் 3 மாதங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். புதிய மின்சார சட்டத் திருத்த மசோதாவை கைவிடவேண்டும். 

பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கக்கூடாது என்பன உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் வெள்ளிக்கிழமை கருப்புப்பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இதன்படி திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்(சிஐடியூ) தங்கவேல் தலைமை வகித்தார். இதில், ஏஐடியூசி பனியன் சங்க பொதுச்செயலாளர் என்.சேகர், எல்பிஎஃப் மாவட்ட பொதுச் செயலாளர் சிதம்பரசாமி, துணைத்தலைவர் பூபதி, ஐஎன்டியூசி சார்பில் சிவசாமி, எச்எம்எஸ் மாவட்டச் செயலாளளர் முத்துசாமி, எம்எல்எஃப் சார்பில் ராமசாமி, சிவபாலன், சிஐடியூ சார்பில் சம்பத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

அதே போல், மாநகராட்சி மண்டல அலுவலகங்கள், மாநகராட்சி அலுவலகம், வடக்கு வட்டாட்சியர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நலவாரிய அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பல்லடம், தாராபுரம், ஊத்துக்குளி, அவிநாசி உள்ளிட்ட மாவட்டத்தில் 150 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றதாகத் தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.