/

தொண்டர்களைக் காக்க மாவட்டந்தோறும் வழக்கறிஞர்கள் குழு: திமுக கூட்டத்தில் தீர்மானம்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்டச் செயலாளர்கள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் இன்று காணொலி மூலமாக நடைபெற்றது. 

News image
Updated On :24 மே 2020, 5:55 am

DIN

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்டச் செயலாளர்கள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் இன்று காணொலி மூலமாக நடைபெற்றது. 

இதில், திமுக நிர்வாகிகள் மீதான வழக்குப்பதிவு மற்றும் கைது நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. 

கரோனாவைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபடாமல் திமுகவினரை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபடுவதா? என தமிழக அரசுக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டதோடு, திமுகவினரை காக்க அவர்கள் மீதான வழக்குகளை எதிர்கொள்ள மாவட்டந்தோறும் வழக்கறிஞர்கள் குழு அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.