மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

ஓ. பன்னீர்செல்வம் மருத்துவமனையில் அனுமதி: நலம் விசாரித்தார் முதல்வர் பழனிசாமி

தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மருத்துவப் பரிசோதனைக்காக நேற்று மாலை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை நேரில் சந்தித்த முதல்வர் பழனிசாமி நலம் விசாரித்தார்.

News image
Updated On :25 மே 2020, 9:17 am

DIN


சென்னை: தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மருத்துவப் பரிசோதனைக்காக நேற்று மாலை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை நேரில் சந்தித்த முதல்வர் பழனிசாமி நலம் விசாரித்தார்.

சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நேற்று மாலை அனுமதிக்கப்பட்டதாகவும், அவருக்கு முழு உடற் பரிசோதனை செய்யப்படுவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும், வழக்கமான மருத்துவப் பரிசோதனை முடித்து இன்று மாலை அவர் வீடு திரும்புவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Story image

இதற்கிடையே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, இன்று மதியம் 12 மணியளவில், மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தார். அவருடன் தமிழக நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் உடன் சென்றார்.

முன்னதாக இன்று காலை அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவித்த நிலையில், மருத்துவமனை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ஞாயிற்றுக்கிழமை மாலையே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.