திமிரியில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
ராணிப்பேட்டை மாவட்டம் இந்து முன்னணி சார்பில் திமிரியில் உள்ள குமரகிரி சுப்பிரமணியசாமி கோவில் மலையடிவாரத்தில் செவ்வாய்க்கிழமை காரோனாவை விரட்டக்..


ராணிப்பேட்டை மாவட்டம் இந்து முன்னணி சார்பில் திமிரியில் உள்ள குமரகிரி சுப்பிரமணியசாமி கோவில் மலையடிவாரத்தில் செவ்வாய்க்கிழமை காரோனாவை விரட்டக் கோயில்களைத் திறக்க வேண்டும் என்ற முழக்கங்களுடன் மாவட்டச் செயலாளர் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதில் திமிரி ஒன்றிய தலைவர் இளங்கோவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதேபோல், ஆற்காடு நகரில் பாலாற்றங்கரையில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில், அண்ணாசாலையில் உள்ள விநாயகர் கோவில். ஜீவானந்தம் சாலையில் உள்ள பழனி ஆண்டவர் விநாயகர் கோவில், தோப்பு கனா பகுதியிலுள்ள கங்காதர ஈஸ்வரர் வரதராஜ பெருமாள் கோவில் ஆகிய கோவில்களின் முன்பு மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜெகன் தலைமையில் கற்பூரம் ஏற்றி தோப்புக்கரணம் போட்டு போராட்டம் நடத்தினார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...