அமைச்சர் காமராஜின் குற்றச்சாட்டுப் பொய்யானது: எஸ்.எஸ். பழனிமாணிக்கம்

உணவுத் துறை அமைச்சர் காமராஜின் குற்றச்சாட்டுப் பொய்யானது என்று தஞ்சாவூர் தொகுதி மக்களவை உறுப்பினரும்,
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை மாலை மனு அளித்த திமுகவைச் சேர்ந்த சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை மாலை மனு அளித்த திமுகவைச் சேர்ந்த சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள்.


உணவுத் துறை அமைச்சர் காமராஜின் குற்றச்சாட்டுப் பொய்யானது என்று தஞ்சாவூர் தொகுதி மக்களவை உறுப்பினரும், திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினருமான எஸ்.எஸ். பழனிமாணிக்கம் கூறியுள்ளார். 

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியரை வெள்ளிக்கிழமை மாலை சந்தித்து மனு அளித்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அரிசி, பருப்பு, எண்ணெய் போன்றவை முறையாகக் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டுத் தொடக்கத்திலிருந்து இருந்து வருகிறது. அடுத்த வாரம் அல்லது இரு வாரங்களில் கிடைக்கும் எனக் கூறினர். இந்நிலையில் இந்த கோரிக்கை மனுக்களெல்லாம் போலியானது என உணவுத் துறை அமைச்சர் காமராஜ் போலியான குற்றச்சாட்டை கூறியிருக்கிறார். இது பொய் என்பதை நிரூபிப்பதற்காக அந்தந்த மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கியிருக்கிறோம். அரசுக் குறைகளைக் களைவதற்குப் பதிலாகத் தொண்டு செய்கிற எங்கள் மீதும், எங்களது தலைவர் மீதும் குற்றம்சாட்டுவது தகுதிக்கு அழகல்ல. 

ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் 3 அமைச்சர்கள் உள்ளனர். தண்ணீர் திறப்பதற்கு இன்னும் 10 நாள்கள் கூட இல்லை. யார் தூர் வாருவது என்பது தொடர்பாகச் சண்டையிட்டுக் கொள்கின்றனர். ஆனால், 10 மாதங்களுக்குள் திட்டம் போட்டு காவிரியில் புதிதாகக் கால்வாயை வெட்டி வருகிற ஜூன் 12}ம் தேதியே தண்ணீர் திறந்துவிடுவதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி முயற்சி செய்கிறார். மாவட்ட மக்களைக் காப்பாற்ற முயற்சி செய்யாமல், இதுபோன்ற பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறுவது கண்டிக்கத்தக்கது என்றார் பழனிமாணிக்கம்.

அப்போது, மாநிலங்களவை உறுப்பினர் மு. சண்முகம், சட்டப்பேரவை உறுப்பினர்கள் துரை. சந்திரசேகரன் (தெற்கு மாவட்டச் செயலர்), எம். ராமச்சந்திரன், சாக்கோட்டை க. அன்பழகன், கோவி. செழியன், டி.கே.ஜி. நீலமேகம், வடக்கு மாவட்டச் செயலர் சு. கல்யாணசுந்தரம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com