45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

பட்டுக்கோட்டையில் வேளாளர் சமூகத்தினர் ஆர்ப்பாட்டம்

பட்டுக்கோட்டையில் அகில இந்திய வேளாளர் மற்றும் வெள்ளாளர் கூட்டமைப்பு சார்பில் அதன் நிறுவனர், தலைவர் ஆர்.ஏ. அண்ணாதுரை தலைமையில் ஆர்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

News image
ஆர்ப்பாட்டத்தில் திரண்ட வேளாளர் சமூகத்தினர்.
Updated On :1 நவம்பர் 2020, 12:22 pm

DIN

பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை தலைமை அஞ்சலகம் அருகில் அகில இந்திய வேளாளர் மற்றும் வெள்ளாளர் கூட்டமைப்பு சார்பில் அதன் நிறுவனர், தலைவர் ஆர்.ஏ. அண்ணாதுரை தலைமையில் ஆர்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

வேளாளர் என்ற பெயரை வேறு சில சமூகத்தினர் பயன்படுத்துவதற்கும், அதற்கு ஆதரவு தெரிவித்து வரும் சில அரசியல் கட்சிகளுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இதில், பட்டுக்கோட்டை பகுதியிலுள்ள முசுகுந்த வேளாளர் சமுதாய அமைப்பைச் சேர்ந்த பெரியவர்கள், இளைஞர்கள் மற்றும் வேளாளர் சமூகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் வேளாளர் இனப் பெயரை வேறு யாருக்கும் வழங்க விட மாட்டோம். எங்கள் சமூகத்தின் அடையாளமான வேளாளர் என்ற பெயரை வேறு சமூகத்தினருக்கு தாரை வார்க்க மாட்டோம் என கோஷங்கள் எழுப்பினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.